பாலியல் கூறுகள் கலந்த நட்புக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜேர்மானியர்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
395Shares
395Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், மூன்றில் ஒரு பங்கு ஜேர்மனியர்கள் நல்ல பயனுள்ள நண்பர்களை தேடிக்கொண்டிருப்பதாகவும், நண்பர்களாக இருக்கும்போது ரொமான்ஸ் செய்து கொள்வதில் அவர்களுக்க சம்மதம் எனவும் தெரிவித்துள்ளனர்.

யூலை 30 ஆம் திகதி நண்பர்கள் தினத்தை முன்னிட்டு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில், ஆண்களும் பெண்களும் உண்மையான நண்பர்களாக இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு, 75 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2,045 பேர் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் பாதி பேர், பிரிந்து போன காதல் துணையுடன் மீண்டும் நட்பாக இருக்க முடியும் என கூறியுள்ளனர்.

மேலும், மூன்று பேரில் ஒருவர் பாலியல் கூறுகளை உள்ளடக்கிய நட்புறவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

69 சதவீதம் பேர் நட்புறவில் காதல் உறவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்