நாளை முதல் ஜேர்மனிக்குள் புலம்பெயர்வோர் சந்திக்க உள்ள கெடுபிடிகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
385Shares
385Shares
lankasrimarket.com

2015ஆம் ஆண்டு ஜேர்மனிக்குள் அகதிகள் மகிழ்ச்சியுடன் நுழைந்த அதே ஆஸ்திரிய எல்லையில் நாளை முதல் பல மாற்றங்கள் கொண்டுவரப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

இனி ஆஸ்திரிய எல்லை வழியாக ஜேர்மனிக்குள் நுழைய முயல்வோரை மேற்பார்வையிடுவதற்காக கணினிமயமாக்கப்பட்ட உபகரணங்களுடன் பொலிசார் ஏற்கனவே குவிக்கப்பட்டாயிற்று.

புகலிடம் கோருவோரின் ஆவணங்களை பரிசீலித்து அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்களை விரைந்து வெளியேற்றுவதற்காக Transit centres என்று அழைக்கப்படும் மையங்கள் தெற்கு ஜேர்மனியில் அமைக்கப்பட்டாயிற்று.

புகலிடம் பெயர்வோர் குறித்து ஜேர்மனியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும், தற்போது பெரும்பான்மையான ஜேர்மானியர்கள் புலம்பெயர்தல் குறித்த கடுமையான விதிகளையே ஆதரிப்பதாக சமீபத்தைய வாக்கெடுப்புகள் தெரியப்படுத்தியுள்ளன.

அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியின் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலும் தனது பவேரிய கூட்டணி கொடுத்த அழுத்தம் காரணமாக சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதோடு முறையான ஆவணமற்றோரை விரைந்து வெளியேற்றுவதற்கும் சம்மதிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளார்.

இருந்தும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்வதை விட தற்கொலை செய்வதே நலம் என்னும் மன நிலைக்கு வந்து விட்ட புலம் பெயர்வோர் பல்வேறு எதிர்ப்புப் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்