ஒரு அகதி, ஒரு இந்தியர் மற்றும் ஒரு இத்தாலியருடன் நோபல் பரிசை பகிர்ந்து கொள்ளும் ஜேர்மானியர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
114Shares
114Shares
lankasrimarket.com

ஜேர்மனியைச் சேர்ந்த கணிதவியலாளர் மற்றும் பேராசிரியர் Peter Scholze, கணிதத்திற்கான நோபல் பரிசு என அழைக்கப்படும் Fields Medal எனப்படும் பரிசை பெற்றுள்ளார்.

அவர் இந்த பரிசை குர்திஷ் அகதியும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர் மற்றும் algebraic geometry துறை நிபுணருமான Caucher Birkar, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் கலிபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டனின் Institute for Advanced Studyஐச் சேர்ந்தவருமான Akshay Venkatesh மற்றும் சூரிச்சின் Swiss Federal Institute of Technologyஐச் சேர்ந்த Alessio Figalli ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார்.

கணிதத்துறையின் உயரிய விருதான Fields Medal நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை டொரண்டோ பல்கலைக்கழகத்தால் நான்கு சிறந்த கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருது பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையாக 15,000 கனடா டொலர்கள் வழங்கப்படும்.

ரியோ டி ஜெனிரோவில் நேற்று நடைபெற்ற சர்வதேச கணித மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த உயரிய கௌரவத்தைப் பெறும் இரண்டாவது ஜேர்மானியரான Peter Scholze, arithmetic geometry துறையில் நிபுணராவார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்