தவறுதலாக நாடு கடத்தப்பட்ட ஆப்கன் அகதி விடயத்தில் திடீர் திருப்பம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
221Shares
221Shares
lankasrimarket.com

ஜேர்மனியிலிருந்து தவறுதலாக நாடு கடத்தப்பட்ட ஆப்கன் அகதி மீண்டும் ஜேர்மனி திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nasibullah S (20) என்னும் ஆப்கன் அகதி ஜேர்மனியில் தனது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தார்.

அவரது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும்போதே அவர் தவறுதலாக நாடு கடத்தப்பட்டார்.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் Greifswald நகர நிர்வாக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் காபூலுக்கு நாடு கடத்தப்பட்ட 68 ஆப்கன் அகதிகளுடன் Nasibullah Sம் தவறுதலாக நாடு கடத்தப்பட்டார்.

தற்போது அவர் மீண்டும் ஜேர்மனிக்கு அழைத்து வரப்பட இருக்கிறார்.

முதலாவது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் கொண்டு வரப்படும் அவருக்கு அங்குள்ள ஜேர்மனி தூதரகம் ஜேர்மனிக்கு வருவதற்கு முறையான விசா வழங்க இருக்கிறது.

அவர் தவறுதலாக நாடு கடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள ஜேர்மனியின் புலம் பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான ஃபெடரல் அலுவலகம், அவரது பயணத்திற்கான செலவுகள் முழுவதையும் ஏற்றுக் கொள்ள இருக்கிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்