ஜேர்மனில் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர் குறித்து வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
172Shares
172Shares
lankasrimarket.com

ஜேர்மனில் Cologne நகரில் நச்சுப்பொருட்களை பயன்படுத்திய கணவன், மனைவியை பொலிசார் கைது செய்தனர்.

துனிசியா நாட்டை சேர்ந்த இவர்கள், தாங்கள் வசித்து வந்த குடியிருப்பில் நச்சுப்பொருளை பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் குடியிருப்பில் சோதனை நடத்தி தம்பதியினரை கைது செய்துள்ளனர்.

Sief Allah H. என்ற இந்த நபர், தனது உடைமைகளில் வெடிகுண்டு தயாரிக்கும் பொருள்களை வைத்திருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

ஒரு தீவிரமான வன்முறைத் திட்டத்தை திட்டமிடுதல் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இந்நபர் இருந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

மேலும், இந்நபருக்கு போலியான பாஸ்போர்ட்டை ஜேர்மன் நாட்டை சேர்ந்த நபர் தயாரித்து கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது, இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் நாடு கடத்தப்படுவார் என கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்