பெற்ற மகனை பாலியல் தொழிலுக்காக விற்ற தம்பதி: இரண்டு ஆண்டுகள் துஷ்பிரயோகித்த சோகம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
341Shares
341Shares
lankasrimarket.com

பெற்ற மகனை பாலியல் தொழிலுக்காக இணையத்தில் விற்ற ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.

Berrin Taha (48) மற்றும் அவரது மனைவியான Christian Lais (39) என்னும் அந்த தம்பதியினர் தற்போது 10 வயதாகும் தங்கள் மகனை இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொழிலுக்காக இணையத்தில் விற்றது தெரியவந்துள்ளது.

அது மட்டுமின்றி தங்கள் சொந்த மகனையே அவர்கள் இருவரும் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததோடு அதை வீடியோவும் எடுத்துள்ளார்கள்.

Freiburg மாகாண நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு 12 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதோடு அந்த ஆணுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.

அவர்களுடன் அவர்களது கூட்டாளிகளான இன்னும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த சிறுவனை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதனுக்கு 10 ஆண்டுகள் சிறையும் 18,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த தொகை பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் அந்த தம்பதியரும் சிறுவனுக்கும் அவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இன்னொரு இளம்பெண்ணுக்கும் இழப்பீடாக 42,500 யூரோக்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த சிறுவன் அரசு காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளான்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்