பாலை விட பீரே உடல் நலத்திற்கு சிறந்தது! அறிவியல் காரணம் இதோ

Report Print Basu in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

விலங்குகள் நலவாரியமான பீட்டா, பாலை விட பீரே உடல் நலத்திற்கு சிறந்ததது என விளம்பரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The People for Ethical Treatment of Animals என்ற பீட்டா அமைப்பு அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலுக்கு பதில் பீர் குடிக்கும் படி விளம்பரம் செய்துள்ளனர்.

இதற்கான அறிவியல் காரணத்தையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதில், உடலில் எலும்புகள் வலுவடைய பால் காரணமாக இருப்பதாகவும், ஆனால் பீர் குடித்தால் எலும்புகள் சிதைவது தடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், பசுக்களை வதைத்து பால் பெறப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை தாண்டி, பால் குடித்தால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக பீட்டா அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பால் பொருட்களை உண்பதால் இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன், கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments