12 பிரச்சனைகள்..ஓரே ஒரு தீர்வு! எல்லாம் உப்பு, எலுமிச்சை, மிளகின் மாயம்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

எதற்கெடுத்தாலும் மருத்துவரிடம் செல்வதை விட காய்ச்சல், இருமல், சளி போன்ற வியாதிகளுக்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்.

இதனால் பக்கவிளைவுகள் ஏதுமின்றி இயற்கையான மருந்துகளின் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சை, உப்பு, மிளகு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
  • ஒரு டம்ளர் சூடான தண்ணீரில், 1 டீஸ் புண் உப்பு மற்றும் அரை தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து குடித்து வந்தால், கடுமையான இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்ற பிரச்சனைகள் உடனே சரியாகிவிடும்.
  • மூக்கடைப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், மிளகு, சீரகம், இலவங்கப்பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து, இந்தக் கலவையை மெதுவாக முகர்ந்துக் கொண்டு வந்தால், மூக்கடைப்பு மற்றும் தும்மல் பிரச்சனைகள் குணமாகிவிடும்.
  • பித்தக்கற்கள் பிரச்சனைகள் மூலம் கஷ்டப்படுபவர்கள், 3 துளிகள் ஆலிவ் ஆயில், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மிளகுப் பொடி கலந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
  • வாய் புண் இருப்பவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து, அதை வாயில் வைத்து நன்றாக கொப்பளித்து துப்ப வேண்டும். இதனால் வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து, வாய் புண்களும் விரைவில் குணமாகிவிடும்.
  • ஒரு கப் சூடான நீரில், 1/4 டீஸ்பூன் மிளகுப் பொடி, 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள்ஸ்பூன் தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து குடித்தால், நமது உடம்பில் உள்ள கெட்டக் கொழுப்புகள் அனைத்தும் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைந்து விடும்.
  • திடீரென குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அதற்கு ஒரு டம்ளர் சூடான தண்ணீரில், 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1டீஸ்பூன் மிளகு பொடியை கலந்து குடிக்க வேண்டும்.
  • ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், 10 மிளகு, 2 கிராம்பு, 15 துளசி இலைகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கண்ணாடி குடுவையில் 15 நிமிடம் வரை மூழ்க வைத்து, பின் அதனுடன் சிறிது தேன் கலந்து அதை குடித்து வந்தால், நல்ல மாற்றம் கிடைக்கும்.
  • பல்வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், 1/2 டீஸ்பூன் கிராம்பு எண்ணெய், 1/2 டீஸ்பூன் மிளகுப் பொடி ஆகியவற்றைக் கலந்து, அதை பற்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் தடவி வந்தால், விரைவில் பல்வலி குணமாகிவிடும்.
  • குளிர்காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு கப் சூடான நீரில் எலுமிச்சைப் பழத்தின் தோல்களை 10 நிமிடம் வரை ஊற வைத்து, பின் அதிலிருந்து எலுமிச்சை தோலை நீக்கிவிட்டு அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments