இந்த அறிகுறிகளை நீங்கள் அலட்சியப்படுத்தினால் ஆபத்து நிச்சயம்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

நமது உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடு ஒன்று இணைந்து அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளையும் குறிக்கிறது.

எனவே நமது உடம்பில் உள்ள ஏதேனும் ஒரு உறுப்பில் லேசான அறிகுறிகள் தென்பட்டாலும் அதை சாதாரணமாக நினைத்து, புறக்கணித்து விடாதீர்கள்.

ஏனெனில் அந்த அறிகுறிகள் சாதாரணமாக இருந்தாலும் நாளடைவில் அது மோசமான பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கண்களின் நிறம்

நமது கண்களில் வெள்ளைக் கரு விழியின் நிறத்தில் சிறிதளவு மாற்றம் தென்பட்டாலும் அதை உடனே பரிசோதிக்க வேண்டும்.

ஏனெனில் அது மஞ்சள் காமாலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனையாகக் கூட இருக்கலாம்.

குடல் மற்றும் சிறுநீர்ப்பை

குடலின் இயக்கம் சரியாக செயல்படாமல் செரிமானப் பிரச்சனைகள் மற்றும் குறைவான அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பது இது போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டால் அது புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

அரிப்பு தோன்றுதல்

நாம் மலம் கழிக்கும் இடத்தில் கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது அழற்சி நோய் மற்றும் மூல நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

தோலில் மச்சம்

நமது தோலில் அதிகப்படியான மச்சம் ஏற்பட்டால் அதை உடனே தோல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் அது சூரிய ஒளியின் சேதத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளாகக் கூட இருக்கலாம்.

தொடர்ச்சியான இருமல்

ஒருவருக்கு தொடர்ச்சியாக இருமல் ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது குரல்வளை பாதிப்பு, தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயாக இருப்பதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இளம் நரைமுடி

ஒருவருடைய இளம் வயதிலேயே முடியில் நரை ஏற்பட்டால், அது சிலருக்கு அவர்கள் பெற்றோர்களின் ஜீன் காரணமாக கூட இருக்கலாம். ஆனால் அது 30 வருடத்திற்கு பின் தான் அந்த மாற்றம் தென்படும்.

சிலருக்கு, அதற்கு முன்பே தென்பட்டால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

மன அழுத்தம்

ஒருவருக்கு கடுமையாக மன அழுத்தம் ஏற்பட்டு ஏதேனும் பொருட்களை உடைக்கும் அளவுக்கு கோபத்தை வெளிபடுத்த தோன்றினால், உடனே மன நல மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

வாயில் எரிச்சல்

சில நேரங்களில் நமது வாய் மற்றும் நாக்கில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது வாய் புண் மற்றும் குடல் புண் சம்பந்தபட்ட நோயாக கூட இருக்கலாம்.

நகம் உடைதல்

நமது விரல்களில் உள்ள நகங்கள் உடைந்து, நிறம் மாறி இருந்தால், அது குடல் அழற்சி, கல்லீரல் நோய் மற்றும் எய்ட்ஸ் நோயாக இருப்பதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments