தேங்காய் தண்ணீரை 7 நாட்கள் குடித்தால் இப்படி ஒரு மாற்றம் நிகழுமா?

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள், காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றுகிறது.
  • தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.
  • தேங்காய் தண்ணீரைக் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
  • தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக இருப்பதால், இதை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை மற்றும் வாய்வுத் தொல்லைகள் நீங்குவதை நன்கு உணரலாம்.
  • தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. எனவே இதனை தினமும் குடித்தால், பசி கட்டுப்படுவதோடு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கலாம்.
  • தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
  • கடுமையான தலைவலியை உணரும் போது, இந்த தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, உடலிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
  • கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments