உடல் எடை குறைக்க? திரிபலா பொடி இருக்கே

Report Print Santhan in ஆரோக்கியம்
0Shares
0Shares
Cineulagam.com

உடல்பருமன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் வரும் ஒரு பெரும் பிரச்னை.

இதற்கான காரணத்தை வெறும் ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. பெரியவர்களைப் பொறுத்தமட்டில், உடல் உழைப்பு குறைந்துபோனது மிக முக்கியக் காரணம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரை நொறுக்குத்தீனிகள் மற்றும் மைதா நிறைந்த உணவுகள் உண்பது காரணமாகச் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்ல, எல்லா விளையாட்டுகளும் வீடியோ கேமாகச் சுருங்கிப்போனதால், வெளியே சென்று ஓடி, ஆடி விளையாடுவது குறைந்து போய் குழந்தைகள் வீட்டுக்குள் அடைந்துகிடப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது

உடல்பருமனைக் குறைக்க ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்...

எலுமிச்சையும் தேனும்

ஒரு கப் சுத்தமான நீரை எடுத்துச் சூடுபடுத்திக்கொள்ளவும். மிதமாகச் சூடானதும் அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.

சுமார் இரண்டு மாதங்கள் இதைத் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் தெரியும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் கருமிளகு சேர்த்தும் குடிக்கலாம்.

திரிபலா பொடி

ஒரு கப் நீரை எடுத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் திரிபலா பொடியை சேர்த்துக்கொள்ளவும்ம். இரவு முழுக்க இதை அப்படியே வைத்திருந்து, மறுநாள் காலை அது அளவில் பாதியாக ஆகும்வரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

பின்னர் அதை வடிகட்டி, மிதமான சூட்டில் எடுத்துக்கொண்டு இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் குடித்து வந்தாலும் எடை குறையும்.

சீரக டீ

நான்கு அல்லது ஐந்து கப் நீரைச் சூடாக்கிக்கொள்ளவும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் சீரக விதை, கொத்தமல்லி விதை, பெருஞ்சீரக விதை சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் சூடாக்கி ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இதைக் குடித்துவந்தால், நிச்சயம் பலன் உண்டு.

உணவு முறை மாற்றம்

காலை உணவாக மிக எளிதில் ஜீரணமாகக்கூடிய பழங்கள், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிக கலோரி உள்ள உணவுகளை மதியம் சாப்பிட வேண்டும்.

இரவில் உணவு செரிமானமாகக் குறைந்த நேரமே இருப்பதால், மிக எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை இரவு ஏழு மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டுவிடுவது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments