எதற்காக மீன் எண்ணெய் சாப்பிட வேண்டும்?

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

மீன் எண்ணெய் மாத்திரையை உட்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண் பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

அடங்கியுள்ள சத்துக்கள்
advertisement

சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் ஏ, டி மற்றும் விட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் உள்ளன, மேலும் 100 கிராம் மீன் எண்ணெய்யில், நிறைவுற்ற கொழுப்பு - 21 கிராம், நிறைவுறதாக கொழுப்பு 16 கிராம் உள்ளன.

மருத்துவ பயன்கள்

நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால், இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, மீன் எண்ணெய்யில் இருக்கும் ஒமேகா பேட்டி ஆசிட், அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும் என்பதால் இதய நோயாளிகள் இதனை சாப்பிடலாம்.

இதில் உள்ள EPA எனும் நோய் எதிர்ப்பு பொருள், மன நிம்மதி அளித்து மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.

இந்த எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும்.

கால்சியம் குறைபாட்டால் மூட்டு வலி பிரச்சனைகள் இருந்தால், இதனை சாப்பிடுவதன் மூலம், எலும்பு வலுவடையும், மூட்டு வலி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

சருமம் நன்கு மென்மையாகவும், கூந்தலும் நன்றாக வளரும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெய்யை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 பேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments