இந்த 6 விடயத்தை சாப்பிட்டவுடன் செய்யவே கூடாது

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

அன்றாடம் மூன்று வேளைகளும் உணவு சாப்பிட்ட பிறகு, இனிப்பு சாப்பிடுவது, பீடா போடுவது போன்ற பழக்கங்களை பலர் தினமும் பின்பற்றுவார்கள்.

ஆனால் உண்மையில், உணவு சாப்பிட்டவுடன், நாம் செய்யும் சில பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

உணவு சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத விடயங்கள்?
  • உணவு சாப்பிட்டு முடித்ததும் புகைபிடிப்பது, மது அருத்துவது போன்ற பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் செரிமானம் தடைபட்டு, அஜீரணம் பிரச்சனையை ஏற்படும்.
  • திடமான உணவுகளை சாப்பிட்ட பின் உடனே திரவ உணவுகளான பழச்சாறு போன்றவற்றை அருந்தக் கூடாது. ஏனெனில், இது செரிமானத்தை தடுத்து, வயிறு தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தும்.
  • சாப்பிட்டு முடித்தவுடன் உறங்கக் கூடாது. இதனால் செரிமான பிரச்சனை ஏற்பட்டு, அதிகப்படியான உடல் பருமன் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.
  • தினமும் உணவுக்கு பின் உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது. ஏனெனில் இதனால் வயிற்றுப் பிடிப்பு பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
  • உணவு சாப்பிட்டவுடன் குளிப்பதால், கை மற்றும் கால்களில் ரத்த ஓட்டம் வேகமாக இருக்கும். உடலில் ஜீரணம் விரைவில் நடைபெறும். இதனால் மந்தம் போன்று ஒருவித அசௌகரிய பிரச்சனை ஏற்படும்.
  • சாப்பிட்டு முடித்தவுடன் டீ மற்றும் காபி குடிக்கக் கூடாது. ஏனெனில் டீ, காபியில் உள்ள ஆக்சலேட் மற்றும் ஃபைலேட், நம் உடலில் ஏற்படும் அயர்ன் அப்சார்ப்ஷன் (Iron absorption)-ஐ சரியாக நடக்க விடாமல் தடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments