மிதமான மதுவும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும்: புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

பொதுவாக மது அருந்துதல் என்றாலே உடல் நலத்தினைப் பாதிக்கும் என பல ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

எனினும் குறைந்த அளவில் மது அருந்துவதாலோ அல்லது குறைந்த ஆல்கஹால் உள்ள மதுவை அருந்துவதாலோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஒரு கருதுகோளும் காணப்படுகின்றது.

ஆனால் மிதமான மது அருந்துதல் கூட மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில் 14 வயதிற்கு மேற்பட்ட மது அருந்தும் பழக்கமுடையவர்களுள் 78 சதவீதமானவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போதே மூளைப் பாதிப்புக்கும் மது அருந்துதலுக்கும் தொடர்பிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 17 சதவீதமான அவுஸ்திரேலியர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதாகவும், இதனால் அவர்கள் நீரிழிவு, ஈரல் நோய்கள் மற்றும் அறிவாற்றல் பிரச்சினைகள் என்பவற்றிற்கு முகம் கொடுக்க நேர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments