உடல் எடை குறைக்க: அடிக்கடி இந்த காய் சாப்பிடுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

சுரைக்காயில் விட்டமின்கள், தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?
  • சுரைக்காயில் நீர்ச்சத்து மற்றும் அதிகளவு நார்சத்து உள்ளதால், உடல் பருமன் உள்ளவர்கள் அடிக்கடி சுரைக்காயை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • சுரைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், அது செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
  • சுரைக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள், குடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, மலச்சிக்கல், வாயுப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • உணவில் சுரைக்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால், அது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.
  • முற்றிய சுரைக்காயை சாப்பிடாமல், சற்று இளம் பிஞ்சான சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments