தொப்புளில் எண்ணெய் வைப்பதற்கு இதுதான் காரணமாம்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. அந்த தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியும் இணைகிறது.

அறிவியல் படி, ஒருவர் இறந்த பின் அவருடைய தொப்புள் பகுதி மட்டும் 3 மணிநேரம் சூடாக இருக்கும்.

அதற்கு காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. இதனால் தொப்புள் பகுதி எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக கருதப்படும் வயிற்றின் தொப்புள் பகுதிக்கு பின் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்ற ஒன்று அமைந்துள்ளது.

எனவே இவ்வளவு சிறப்புமிக்க நம் தொப்புள் பகுதியில் உள்ள ஏதாவது நரம்புகள் வறண்டு போவதை தடுப்பதற்கு, எண்ணெய்களை கொண்டு அடிக்கடி மசாஜ் செய்ய வேண்டும்.

தொப்புளில் எந்த எண்ணெய்களை வைக்கலாம்?

  • இரவில் தூங்குவதற்கு முன், தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

  • தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யலாம்.

  • தூங்குவதற்கு முன், தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு விட்டு தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்து வரலாம்.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • தொப்புளில் எண்ணெய் வைப்பதால், கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சனைகள் போன்றவை குணமாகிறது.
  • பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் போன்ற நன்மைகளும் முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை ஆகிய பிரச்சனைகளை போக்கவும் உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments