முருங்கைப் பூவின் அற்புதம்: தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasri.com

முருங்கை மரத்தின் இலை, பூ, பட்டை, வேர், காய் ஆகிய அனைத்துமே ஒவ்வொரு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

அதில் முருங்கைப் பூவை எப்படி எடுத்துக் கொண்டால், அதனுடைய பலனை பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

முருங்கை பூவின் மருத்துவ குணங்கள்
  • முருங்கைப்பூ, பிரண்டை மற்றும் சிறிதளவு தேங்காய் ஆகியவற்றை சேர்த்து புட்டு அவிப்பது போல் அவித்து, அதை பிழித்து சாப்பிட்டால், கடுமையான வயிற்று வலி குறையும்.
  • பாலை நன்கு காய்ச்சி அதில் முருங்கைப் பூக்களைப் போட்டு தினசரி சாப்பிட்டு வர வேண்டும். இதனால் தாது நல்ல புஷ்டி பெறும்.
  • முருங்கை பூவுடன் கற்றாலைச்சாறு, வெண்ணெய், ஆகிய அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து கலந்து, அதை சாப்பிட்டு வந்தால், மேகநோய் எனும் பெண் சீக்கு குணமாகும்.
  • முருங்கைப்பூவை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி தன்மை அதிகரிக்கும்.
  • முருங்கைப்பூவை நன்றாக அரைத்து, பசுவின் பால் மற்றும் தேங்காய் பால் கலந்து, அதில் 25 கிராம் வெல்லம் சேர்த்து காய்ச்சி, லேகிய பதத்தில் இறக்கி, ஒரு நாளைக்கு 2 வேளைகள் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் உதிரப்போக்கு பிரச்சனை குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments