அதிகமாக கோப்பி அருந்துவதனால் இப்படியும் ஒரு நன்மை இருக்கின்றது!

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

காலையில் கோப்பி அருந்துவது அன்றைய தினத்தை புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்க உதவும்.

அதேபோன்று அந்திப்பொழுது ஐஸ் கோப்பி அருந்துவதனால் உடற்சூடு தணிக்கப்படுகின்றது.

தவிர இரவு உணவிற்கு பின்னர் சூடான கோப்பி அருந்துதல் சிறந்த உணவுச் சமிபாட்டிற்கு உதவுகின்றது.

எனினும் மக்கள் தாம் அன்றாடம் கோப்பி அருந்துவதை மட்டுப்படுத்தி வருகின்றனர்.

இதற்கு காரணம் அதிகமாக கோப்பி அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எனும் எதிர்மறையான கருத்தினைக் கொண்டிருப்பதாகும்.

உண்மையில் அதிகமாக கோப்பி அருந்துவது ஆயுளை நீடிக்கும் என புதிய ஆய்வு ஒன்று எடுத்துக்காட்டியுள்ளது.

இம் மாதம் 10 ஆம் திகதி Annals of Internal Medicine எனும் சஞ்சிகையில் இரு பிரதான ஆய்வுகள் பிரசுரம் செய்யப்பட்டிருந்தன.

இவ் இரண்டு ஆய்வுகளும் கோப்பி அருந்துதல் தொடர்பான அச்சத்தை போக்கும் வகையில் அமைந்திருந்தது.

மேலும் இந்த ஆய்வுகள் சுமார் 700,000 தனி நபர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவர்களுள் அதிகளவானவர்கள் கோப்பி அருந்துவதனால் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments