உருளைக்கிழங்கு பற்றிய உண்மைகள்: மருத்துவப் பயன்கள் உள்ளதா?

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

நாவிற்கு சுவையை அள்ளித்தரும் உருளைக்கிழங்கின் வேர், வருடந்தோறும் தோண்டி எடுத்தாலும் 2 வருடங்கள் வரை பலன் தரக்கூடியது. இதன் அடித்தண்டு 3 அடி உயரம் வரையிலும் வளரும்.

இதன் பூக்கள் ஒன்றரை அங்குல அளவு வரை வெண்மை அல்லது ஊதா நிறம் கொண்டதாகும். இலைகள் சற்று மயக்கம் தரும் தன்மை உடையவை.

உருளைக்கிழங்கின் தண்டின் கணுவைச் சுத்தம் செய்து, அதிலிருந்து கூழ்ப்பசை போன்ற சத்துக்களை எடுத்து புளிக்க வைத்து, காய்ச்சி அதில் சர்க்கரை தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

100 கிராம் பச்சை உருளைக்கிழங்கில், எரிசக்தி - 77 கலோரி, மாவுச்சத்து - 17.47 கி, ஸ்டார்ச் - 15.44 கிராம், நார்ச்சத்து - 2.2 கிராம், கொழுப்பு - 0.1 கிராம், புரதச்சத்து - 2 கிராம், ஆகியவையும், விட்டமின்களான தயாமின்(B1) - 0.08 மி.கி, ரிபோஃப்ளேவின்(B2) - 0.03 மி.கி, நியாசின்(B3) - 1.05 மி.கி, பேண்டோதெனிக் அமிலம்(B5) - 0.296 மி.கி, விட்டமின் B6 - 0.295 மி.கி, ஃபோலேட்ஸ்(B9) - 16 மை.கி., விட்டமின் C - 19.7 மி.கி, விட்டமின் E - 0.01 மி.கி, விட்டமின் K - 1.9 மை.கி, ஆகியவையும் உள்ளன.

உலோகப் பொருட்களான சுண்ணாம்புச்சத்து - 12 மி.கி, இரும்புச்சத்து - 0.78 மி.கி, மெக்னீசியம் - 23 மி.கி, மேங்கனீசு - 0.153 மி.கி, பாஸ்பரஸ் - 57 மி.கி, பொட்டாசியம் - 42 மி.கி, சோடியம்(உப்பு) - 6 மி.கி, துத்தநாகம் - 0.29 மி.கி, ஆகியவையும் நீர்ச்சத்து 75 கிராம் ஆகிய எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?
  • பச்சை உருளைக்கிழங்கை அரைத்து மேற்பற்றாகப் போடுவதால் தீக்காயங்கள், தீக் கொப்புளங்கள், பனி வெடிப்பு, பாதத்தின் குதிக்காலில் தோன்றும் வெடிப்பு, புண்கள், கண் இமைகளின் கீழ் தோன்றும் வீக்கங்கள் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
  • பச்சை உருளைக்கிழங்கின் தோலை சிறிது நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து அதை தினமும் முகத்தைக் கழுவி வந்தால், முகம் பளபளப்பு பெறுவதுடன், முகச்சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறையும்.
  • உருளைக்கிழங்கை இரு துண்டுகளாக வெட்டி, அதன் சதைப்பகுதியை நெற்றிப் பொட்டுகளின் இருபுறமும் சற்று மென்மையாக அழுத்தித் தேய்த்து வந்தால், கடுமையான தலைவலி மற்றும் மன அழுத்தம் குணமாகும்.
  • உருளைக்கிழங்கை வெட்டி இரண்டு கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் கண்கள் மீது வைத்தால், கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
  • வயிற்று எரிச்சல், வயிற்று உப்புசம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை போக்க, நன்கு வேகவைத்து மசித்த ஒரு உருளைக்கிழங்கை சூடான பாலுடன் சேர்த்து குடிக்க வேண்டும்.
  • உருளைக்கிழங்கில் டேனின்ஸ் ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் ஆல்கலாய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இவைகள் சத்துப்பொருள் வற்ற வைக்கும் தன்மை உடையதால், இது வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவுகிறது.
  • உருளைக்கிழங்கை வேகவைத்து அந்த நீரை குடித்து வந்தால், மூட்டு வலிகள், வாத வீக்கம் போன்ற வலி பிரச்சனைகள் குணமாகும் என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • உருளைக்கிழங்கு வேகவைத்த நீரை சருமத்தில் தடவி வந்தால், அது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கி, புதிய செல்களை உருவாக்கி, பருக்கள், கரும்புள்ளிகள் வராமல் தடுக்கிறது.
  • ஒவ்வொரு வேளை உணவு சாப்பிடுவதற்கு முன் பச்சை உருளைக்கிழங்கின் சாறு எடுத்து, அதை ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு குடித்து வந்தால், அது வயிற்றில் ஏற்படும் அமிலச் சுரப்பை தடுத்து, மூட்டு வலி வராமல் தடுக்கிறது.
  • உருளைக்கிழங்கின் தோலை, நீர் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், பித்தப்பை தொடர்பான தொல்லைகள் நீங்கி, ஈரல் பலப்படுவதுடன், உடலிலுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments