விட்டமின் B12 சீக்ரெட்ஸ்: இது உடல் பருமன் உள்ளவர்களுக்கு முக்கியம்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

விட்டமின் B குடும்பத்தில் மிகவும் முக்கியமானது என்றால் சயனோகோபாலாமின் எனும் தண்ணீரில் கரையக்கூடிய விட்டமின் B12 ஆகும்.

எனவே இந்த விட்டமின் B12-ஐ தினசரி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

விட்டமின் B12 குறைபாடு ஏற்படுவது ஏன்?
 • உடல் பருமன் உள்ளவர்கள், வேகமாக உடல் எடையைக் குறைக்க பல்வேறு தவறான டயட் முறைகளைப் பின்பற்றுவார்கள். அதனால் அவர்களுக்கு விட்டமின் B12 குறைபாடு ஏற்படும்.
 • சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கும் இந்த விட்டமின் B12 குறைபாடு பிரச்சனைகள் ஏற்படும்.
 • அசைவ உணவுகள் மற்றும் பால் பொருட்களில் மட்டும் விட்டமின் B12 இருக்கிறது. எனவே இந்த இரண்டு உணவுகளையும் நாம் முற்றிலும் தவிர்ப்பதால், விட்டமின் B12 குறைபாடுகள் ஏற்படுகிறது.

விட்டமின் B12 எதற்கு தேவைப்படுகிறது?
 • புரதச்சத்துக்களை நம் உடலுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கு விட்டமின் B12 அவசியமாகும்.
 • நம் உடலில் ரத்தம், ஆக்சிஜனை எடுத்து செல்லும் பணியை சிறப்பாக செய்ய விட்டமின் B12 தேவைப்படுகிறது.
 • உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில் விட்டமின் B12 முக்கியப் பங்கு வகிக்கிறது.
 • நரம்பு மண்டலங்களின் இயக்கம் மற்றும் நினைவுத்திறன் அதிகரிக்க விட்டமின் B12 தேவையானது.
 • மரபணு தொகுப்புகளின் ஆரோக்கியத்திற்கு (DNA Synthesis) சயனோகோபாலமின் எனும் விட்டமின் B12 உதவுகிறது.
விட்டமின் B12 குறைபாடு எப்போது உண்டாகும்?

உடல்நலக் குறைவு, இரைப்பை மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், நுண்ணூட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உட்கொள்வது, புற்றுநோய், HIV பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது விட்டமின் B12 குறைபாடுகள் ஏற்படுகிறது.

மேலும் மது அருந்துவது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கத்தினாலும் விட்டமின் B12 குறைபாடு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

விட்டமின் B12 குறைபாட்டினால் ஏற்படும் ஆபத்துக்கள்?
 • தலைமுடியின் வலிமை குறையும்.
 • எக்சீமா எனும் தோல் தடித்து அரிப்பு மற்றும் ரத்தம் கசிதல் ஏற்படும்.
 • சூடான, குளிர்ந்த பொருட்களைச் சாப்பிடுவதால், வாயில் கூச்ச உணர்வுகள் (Sensitivity) ஏற்படும்.
 • எரிச்சலான உணர்வுகள் எப்போதும் அதிகமாக இருக்கும்.
 • மனப்பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும்.
 • உடல் வலுவிழந்து, ஆற்றல் இல்லாத உணர்வுகள் ஏற்படும்.
 • மலச்சிக்கல், தசைகளில் வலி மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படும்.
 • விட்டமின் B12-ன் அளவு மிகவும் குறைவாக இருந்தால், ரத்த சிவப்பணுக்கள் குறைந்து, ரத்த சோகை ஏற்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments