மலட்டுத்தன்மையை போக்கும் வாழைப்பூ

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

வாழைப்பூ பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம், வாழைப்பூவில் பல்வேறுப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன.

குறிப்பாக வாழைப்பூ இரத்தமூலம், வெள்ளை, பயித்தியம், கபாதிக்கம், உதிரக்கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல், பிரமேகம் இவைகளை குணமக்கவல்லது.

advertisement

வாழைப்பூவை சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்ல உதவுகின்றது.

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும், செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம்.

வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும்.

சீதபேதியையும் கட்டுப்படுத்தும், வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் தீரும்

வாழைப்பூவில் விட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.

advertisement

கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம்.

இதன் பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படுத்தப்படும்.

வாழைப்பூவுடன் சிறிதளவு சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால், வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.

குழந்தையின்மையால் மிகுந்த மனவேதனைக்கு ஆட்படுவர். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்