வெறும் வயிற்றில் இதை குடியுங்கள்: மார்பக புற்றுநோயை தடுக்கலாம்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

காலையில் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு

இது குறித்த ஆய்வில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 6 மாதங்கள் தொடர்ந்து காலையில் க்ரீன் டீ கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் க்ரீன் டீயானது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் hepatocyte growth factor எனும் பொருளை குறைத்துள்ளது என்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் இது புற்றுநோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, புற்றுநோய் செல்கள் பெருகாமல் தடுக்கப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதுபோல புரோஸ்டேட் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் க்ரீன் டீயை குடிப்பதால், புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கப்படுகிறது.

எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் க்ரீன் டீயை குடித்து வந்தால் புற்றுநோயை தடுக்கலாம் என்று கலிஃபோனியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்