உணவுக்கு சுவையூட்ட பயன்படுத்தும் உப்பில் இப்படி ஒரு ஆபத்து இருப்பதை அறிவீர்களா?

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

உப்பு எனப்படும் சுவையூட்டியானது உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ் வகை உப்புக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கலந்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாடுகளில் என்று அல்லாது உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உப்புக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 12 வகையான உப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றது.

இவற்றில் 10 வகையானவை கடல் உப்புக்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்த 12 வகையான உப்புக்களும் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இவற்றினை ஆராய்ச்சி செய்த போதே அவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் காரணமாகவே இவ்வாறு உப்புக்களிலும் பிளாஸ்டிக் சேர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து நடைபெறுமானால் 2050 ஆம் ஆண்டளவில் கடற்பரப்புக்களில் மீன்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்