தொப்பையை குறைக்கும் விதைகள்: 2 மாதத்தில் பலன்

Report Print Printha in ஆரோக்கியம்
2572Shares
2572Shares
Seylon Bank Promotion

நம் உடலில் வயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்புகள் எளிதில் படிவதால், தொப்பை அதிகரித்து விடுகிறது.

இதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு தொட்ரபான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே தொப்பையை குறைக்க எளிய தீர்வு இதோ,

தேவையான பொருட்கள்
  • சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
  • யோகர்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தயாரிப்பது எப்படி?

சியா விதைகள் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்டை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கலவையாக்கி கொள்ள வேண்டும்.

இம்முறையை ஒவ்வொரு நாளும் செய்து அந்த கலவையை இரண்டு மாதங்கள் தொடர்ந்து தினமும் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வர வேண்டும்.

இதனால் இரண்டே மாதங்களில் கவர்ச்சியான தொப்பையில்லாத வயிற்றின் தோற்றத்தை பெறலாம்.

நன்மைகள்
  • சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு ஆசிட்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகமாக்கி, வயிற்றில் படிந்துள்ள அதிக கொழுப்பை எரித்து தொப்பையை குறைக்க உதவுகிறது.
  • கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட்யில் உள்ள புரோட்டீன் வயிற்று தசைகளை இறுகச் செய்து, வயிற்று பகுதி அதிகரிப்பதை தடுத்து, கவர்ச்சியான வயிற்று தோற்றத்தினை பெற உதவுகிறது.
குறிப்பு

மேலே கூறப்பட்டுள்ள முறையை பின்பற்றும் போது தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதுடன், கொழுப்பு மிக்க உணவுகளை தவிர்த்தால் விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்