கருப்பட்டியில் இவ்வளவு அற்புதமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasri.com

கருப்பட்டி பல்வேறுபட்ட மருத்துவகுணங்களை கொண்டது. சளித்தொல்லை, வாயுத் தொல்லை, இருமல் இடுப்பு வலி, எலும்புகள் வலுபெற போன்றவற்றுக்கு அருமருந்தாக காணப்படுகின்றது.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது.

இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

மருத்துவ குணங்கள்
  • கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.
  • கருப்பட்டியை குப்பைமேனிக் கீரையுடன் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
  • கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து பருவம் அடைந்த பெண்களுக்கு கொடுத்து வந்தால் இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • கருப்பட்டியைக் கைகுத்தல் அரிசி சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
  • கருப்பட்டியுடன் சுக்கு, மிளகு கலந்து குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.
  • கருப்பட்டியைக் கரும்புச் சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தி வந்தால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.
  • கருப்பட்டியுடன் ஓமத்தை சேர்த்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
  • நன்கு பசி எடுக்க சுக்குக்கருப்பட்டியுடன், சீரகம் சிறிதளவு வறுத்து அதனுடன் சுக்கையும் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்