வெறும் வயிற்றில் எலுமிச்சை பழச்சாறு குடிப்பது சரியா? தவறா?

Report Print Harishan in ஆரோக்கியம்
456Shares
456Shares
lankasrimarket.com

வெறும் வயிற்றில் எலுமிச்சை பழச்சாறு குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சி செய்பவர்கள் பெரும்பாலும் காலை எழுந்தவுடன் கிச்சனுக்கு சென்று எலுமிச்சம்பழ சாற்றுடன் உப்பு, தேன், இஞ்சி என பலவற்றை சேர்த்து பருகி வருகின்றனர்.

இயற்கையாகவே அமிலத்தன்மை நிறைந்த எலுமிச்சை பழத்துடன் இவற்றை சேர்த்த வெறும் வயிற்றில் பருகி வருவதால் பல உடல்நல குறைபாடுகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

பற்கள்

எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் பற்களின் எனாமலை கடுமையாக பாதித்துவிடும், பற்கூச்சம் உள்ளிட்டவை ஏற்படவும் வாய்ப்புண்டு, ஸ்ட்ரா மூலம் குடிப்பது நலம்.

இதயம்

வெறும் வயிற்றில் அதை குடிப்பதனால் நெஞ்செரிச்சல் ஏற்படுவது மட்டுமல்லாமல், தொடர்ந்து குடித்து வரும் பட்சத்தில் நெஞ்சுவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஜீரணக் கோளாறு

காரம் மற்றும் மசாலா உணவுகளை உட்கொண்ட பின் ஏற்படும் ஜீரணக் கோளாறு போலவே வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழ சாற்றை குடிப்பதால் வாந்தி, குமட்டல் உள்ளிட்ட ஜீரணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புண்டு.

எலுமிச்சம் பழ சாற்றை குடித்து வருவதால் ஆரம்பத்தில் உடல் எடை குறைவது போன்ற மாயை உருவாகினாலும் நாளடைவில் கடும் உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் வெறும் வயிற்றில் அதை குடிப்பதை தவிர்த்துவிடும்படி மருத்துவர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதில் விட்டமின் -சி நிறைந்திருக்கிறது, இதனை குடிப்பதால் சிறுநீர் அதிகம் வெளியேறும். அதாவது நம் உடலிலுள்ள சோடியம் சத்துக்களை வேகமாக நீக்கிடும்.

இதனால் டிஹைட்ரேஷன் ஏற்ப்பட்டு மயக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு, தொடர்ந்து மரணம் நிகழவும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் உணவுப் பழக்கத்தில் எலுமிச்சம்பழத்தை சேர்க்க விரும்புபவர்கள், உணவுக்குப் பின் ஜூஸாக பருகுவது நலம்.

பல நன்மைகள் நிறைந்துள்ள எலுமிச்சம்பழ சாற்றை வெறும் வயிற்றில் பருகுவதால் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்