வயிற்று கொழுப்பு மாயமாய் மறையும்: இதை 3 நாட்கள் தொடர்ந்து குடியுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
2978Shares
2978Shares
lankasrimarket.com

உணவுகளில் கட்டுப்பாடு, கலோரிகள் நிறைந்த உணவுகள் உண்பதைக் குறைப்பது, செரிமானம் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிடுவது போன்றவை உடல் எடையை குறைக்க மிகவும் அவசியம்.

அப்படிப்பட்ட ஒரு அருமையான பானம் தான் அரிசி பால் கஞ்சி ஆகும்.

தேவையான பொருட்கள்
  • கைக்குத்தல் அரிசி – 1 கப்
  • தண்ணீர் – 8 கப்
  • சூரியகாந்தி ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 4 ஸ்பூன்
தயாரிப்பது எப்படி?

முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் அரிசியைப் போட்டு 15 நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும்.

பின் அந்த சாதத்தை மென்மையாக அரைத்து, அதனுடன் சூரிய காந்தி ஆயில் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்தால், அரிசி பால் கஞ்சி தயார்.

குடிக்கும் முறை

தினமும் காலை உணவாக 2 டம்ளர் அரிசி பால் கஞ்சியை குடிக்க வேண்டும். இந்த கஞ்சியை காற்று புகாதப்படி வைத்திருந்தால் 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

நன்மைகள்
  • அரிசி கஞ்சியில் உள்ள ப்ளேவோனாய்டுகள் இதய பிரச்சனைகள், பக்கவாதம் போன்ற பிரச்சனைகளின் தாக்கத்தை தடுக்க உதவுகிறது.
  • நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையாக்கி, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
  • அரிசி பால் கஞ்சியில் கொழுப்புச்சத்து குறைவு என்பதால் அதில் உள்ள விட்டமின் சத்துக்களை நம் உடல் எளிதில் உறிஞ்சி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குறிப்பு

உடல் எடையைக் குறைப்பதற்காக அரிசி பால் கஞ்சியைக் குடிக்கும் போது, தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்