சிலருக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருக்கும். இத்தகையவர்கள் சமையலறை செல்லும் போதெல்லாம் சிறிது அரிசியை வாயில் போட்டு மெல்லுவார்கள்.
அரிசியை வேக வைக்காமல் தொடர்ந்து சாப்பிடக்கூடாது. இதற்கு வேக வைக்காத அரிசியில் உள்ள உட்பொருட்கள் தான் காரணம்.
அரிசியில் செல்லுலோஸ் என்னும் பொருள் உள்ளது. இது தானியங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.
ஆனால் மனித செரிமான மண்டலத்தினால் இந்த செல்லுலோஸை முழுமையாக செரிக்க முடியாது.
ஆகவே அரிசியை வேக வைக்காமல் சாப்பிடும் போது, அது விரைவில் செரிமானமாகாமல் அஜீரண கோளாறை உண்டாக்கும்.
அரிசி பேசில்லஸ் சீரஸ் என்னும் பாக்டீரியாவால் சூழப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா உடலினுள் செல்லும் போது, உடலினுள் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும்.
லெசித்தின் என்பது ஒரு இயற்கை பூச்சிக்கொல்லி. இது மனித உடலினுள் செல்லும் போது, குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
லெசித்தின் அதிகமாக உடலினுள் சேரும் போது, குடல் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே அரிசியை பச்சையாக சாப்பிடும் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.