நேந்திரப்பழத்தை வேகவைத்து நெய் கலந்து 40 நாட்கள் சாப்பிடுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasri.com

வாழையில் ஒரு வகையான நேந்திர பழத்தில் நல்ல சத்துக்களின் அளவு அதிகமாக உள்ளது. அபரிமிதமாக விளையும் நேந்திரப் பழம் சிப்ஸிற்கு மிகவும் புகழ்பெற்றது.

இந்த பழம் மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்ட பழமாக திகழ்கிறது. இத்தகைய பழத்தின் அற்புத பலன்களை தெரிந்துக் கொள்வோம் வாங்க..

நேந்திர வாழைப்பழத்தின் பலன்கள்
  • நன்றாக கனிந்த நேந்திரம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி வேகவைப்பது போன்று அவித்து அதனுடன் நெய்யை கலந்து 40 நாட்கள் காலை உணவாக சாப்பிட்டால் மெலிந்த உடல் பருமனாகும்.
  • ஒரு நேரந்திர பழம், 1 முட்டை ஆகிய இரண்டையும் சேர்த்து காசநோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் காசநோய் விரைவில் குணமாகும்.
  • நன்கு பழுத்த நேந்திர பழத்தை நறுக்கி அதனுடன் சிறிது உப்பை கலந்து வேகவைத்து பிசைந்து 6 மாதத்திற்கு மேலான குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.
  • நேந்திர பழத்துடன் 1/4 ஸ்பூன் மிளகு பொடியை கலந்து தினசரி 3 வேளைகள் சாப்பிட்டு வந்தால் தொடர்ச்சியான இருமல் பிரச்சனை குறையும்.
  • இதயம் சீராக செயல்படுவதற்கு நேந்திரப்பழம் உதவுகிறது. எனவே அவ்வப்போது நேந்திரப் பழத்தை சாப்பிட்டு வந்தால் இதய நோய் வராமல் தடுக்கலாம்.
  • நேந்திரம் பழம் சாப்பிடுவதால் மூளையின் செல்களை சுறுசுறுப்படையச் செய்து, நினைவு ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்