சளியிலிருந்து உடனடி நிவாரணம்

Report Print Thuyavan in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

பருவநிலை மாறும்போது சளி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், பல்வேறு மருந்து மாத்திரைகள் உபயோகித்து பயனில்லையா? சீரகத்தை பயன்படுத்துங்கள்.

சீரகம் சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியதாகும். சீரகத்தில் நோயெதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை அதிகளவில் நிறைந்துள்ளது.

சீரகத்தில் உள்ள சத்துக்களால் காயமடைந்த தசைகள் குணமாகி நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சளிக்கு உடனடி நிவாரணத்தைத் தரும்.

சீரக தண்ணீர் தயாரிப்பது எப்படி?

சீரகத்தை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் சிறிது இஞ்சி மற்றும் துளசி இலைகளை சேர்த்து, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மூக்கடைப்பு ஏற்பட்டிருந்தால், சீரகம் கலந்த நீரில் சிறிது கிராம்பையும் சேர்த்து கொதிக்க விட்டு, பின் அந்த நீரை ஆவி பிடித்தால் நிம்மதியாக மூச்சு விட முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்