காலையில் எழுந்ததும் எலுமிச்சை நீரை குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்

Report Print Printha in ஆரோக்கியம்
660Shares
660Shares
lankasrimarket.com

எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டி அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் 1/2 லிட்டர் நீரை ஊற்றி 3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, 10-15 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.

பின் அந்த நீரை வடிகட்டி அதில் தேன் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

நன்மைகள்
  • உடலின் நோயெர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து எளிதில் விடுபடலாம்.
  • மிகுந்த சோர்வு நிலையை உணர்பவர்கள் எலுமிச்சை வேகவைத்த நீரை குடித்தால் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
  • உடலின் மெட்டபாலிசத்தின் செயல்பாட்டை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • நம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுவதையும் வெளியேற்றி, உடலை சுத்தமாக்க உதவுகிறது.
  • எலுமிச்சை வேகவைத்த நீர் நம் உடலின் pH அளவை சமநிலைப்படுத்தி, மன அழுத்த பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • அதிகப்படியான உடல் எடை உள்ளவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை வேகவைத்த நீரை குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு

எலுமிச்சை பழங்கள் வேகவைத்த நீரை மிகுந்த குளிர்ச்சியான நிலையில் குடிக்கக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்