தோள்பட்டை வலியால் அவதியா? அதிலிருந்து விடுபட எளிய சில டிப்ஸ்

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasri.com

ஒருவரது தோள்பட்டையைச் சுற்றியுள்ள தசைகள் அல்லது தசைநாண்களில் ஏதேனும் ஒரு வழியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது தோள்பட்டை வலியை உண்டாக்கும்.

தோள்பட்டை வலி முதியவர்களை மட்டுமின்றி, அனைத்து வயதினரையும் பாடுபடுத்தக்கூடியது. குறிப்பாக கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்றவற்றை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு தோள்பட்டை வலி அடிக்கடி வரும்.

நாள்பட்ட தோள்பட்டை வலி வருவதற்கு ஆர்த்ரிடிஸ், குருத்தெலும்புகளில் உள்ள பாதிப்பு, எலும்பு முறிவு அல்லது தண்டுவடத்தில் காயம் போன்றவைகளும் காரணங்களாக இருக்கும்.

தோள்பட்டை வலி பெரும்பாலும் தோள்களின் இயக்கத்தில் கட்டுப்பாடு மற்றும் தோள்களில் வீக்கம் மற்றும் மூட்டுகளில் உள்ள விறைப்பு ஆகியவற்றுடன் இணைகிறது.

தோள்பட்டை வலிக்கான அறிகுறிகள்:

* தோள்பட்டையில் விறைப்பு

* தோள்களை அசைப்பதில் சிரமம்

* தோள்பட்டைப் பகுதிகளில் வீக்கம்

* தோள்பட்டையில் விட்டுவிட்டு வலியை உணர்தல்

மருத்துவரை உடனே அணுக வேண்டியவர்கள்:

* தோள்பட்டையின் இடது பக்கத்தில் வலியை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது இதய பிரச்சனைகளைக் குறிக்கும்.

* தோள்பட்டையில் கடுமையான தாங்க முடியாத வலி மற்றும் அசைக்க முடியாமல் தவிர்ப்பவர்கள்.

* தோள்பட்டை வலியினால் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுபவர்கள்

ஐஸ் பேக்:

* ஒரு பாலிதீன் பையில் ஒரு கையளவு ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை கொண்டு வலியுள்ள தோள்பட்டையில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை நேரடியாக தோள்ட்டையில் வைக்க வேண்டாம்.

* இப்படி தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

* ஒருவேளை ஐஸ் கட்டிகள் இல்லாவிட்டால், உறைய வைத்த காய்கறிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

தோள்பட்டை மசாஜ்:

* ஒரு பாத்திரத்தில் 2-3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, அதில் சிறிது கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

* பின் அந்த எண்ணெயை வலியுள்ள தோள்பட்டை பகுதியில் தடவி, வட்ட சுழற்சியில் மசாஜ் செய்யுங்கள்.

* இப்படி இந்த செயலை தொடர்ந்து வலி போகும் வரை செய்யுங்கள்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன்:

* எலுமிச்சையை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். பின் ஒரு பாதியை மட்டும் சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

* பின்பு அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து, அதனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளுங்கள்.

* இந்த பானத்தை தினமும் காலையில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர, தோள்பட்டை வலி குறைந்திப்பதைக் காணலாம்.

யூகலிப்டஸ் ஆயில்:

* 1 டீஸ்பூன் யூகலிப்டஸ் ஆயிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை வலியுள்ள தோள்பட்டையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

* இப்படி தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்