ஏன் கட்டாயம் கற்றாழை ஜெல் சாப்பிட வேண்டும்?

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
0Shares
0Shares

கற்றாழை தாவரம் நமக்கு எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கிறது. எல்லா வகையான சரும தன்மைக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது. இது மட்டுமா நிறைய மருத்துவ குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.

கற்றாழை ஜெல்லில் உள்ள கால்சியம், மக்னீசியம், செலினியம் மற்றும் காப்பர் போன்ற தாதுக்கள் நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.

கற்றாழை ஜூஸை பருகினால் போதும் நமது உள்ளுறுப்புகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை எளிதாக சுத்தப்படுத்துகிறது. இதனால் நமது உடல் உறுப்புகளும் நன்றாக வேலை செய்கிறது.

கற்றாழை கீழ்வாத நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது. இதிலுள்ள அமினோ அமிலமான பிராடிகைனாஸ் மூட்டுகளில் ஏற்படும் அழற்சியை சரி செய்கிறது.

கற்றாழை நமது உடலுக்கு தேவையான 8 முக்கியமான அமினோ அமிலங்களை கொண்டு இருக்கிறது.

கற்றாழை இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு தூய்மையான இரத்தம் கிடைக்கிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால் நமது இதயம் ஆரோக்கியமாக துடிக்க உதவுகிறது.

கற்றாழை ஜெல்லில் உள்ள பாலிசாக்ரைடுகள் மைக்ரோபேஜஸ் அதாவது இரத்த வெள்ளை உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

கற்றாழை நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு செல்களை கரைக்கிறது. மேலும் உடலின் மெட்டா பாலிசம் மற்றும் சீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நம்மால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.

கற்றாழை ஜூஸை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பல் இடுக்குகளில் படிந்த கரைகள், அழுக்குகள், வாய் துர்நாற்றம் போன்றவற்றை நீக்குகிறது. மேலும் வாயில் ஏற்படும் அல்சரையும் குணப்படுத்துகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்