மூலநோய்க்கு முக்கியக் காரணம் மலச்சிக்கல், இதன்போது மலத்தை வெளியேற்றுவதற்கு அதிக அழுத்தம் தரவேண்டி இருப்பதால், ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயைத் தோற்றுவிக்கும்.
ஆண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் போன்றவற்றாலும் இம்மாதிரி அழுத்தம் அதிகமாகி மூலநோய் உண்டாகிறது.
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாமிச உணவு வகைகளையும் விரைவு உணவு வகைகளையும் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு, மூலநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதுதவிர புகைபிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருள்களை உபயோகிப்பதும் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், மூலநோய் எளிதில் வந்துவிடும்.
இவர்களுக்கான ஆயுர்வேத சிகிச்சைகள்
- முதலில் நார்ச்சத்து அதிகமுள்ள உணவகளை உட்கொள்ள வேண்டும், முழு தானியங்கள், நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் இதில் அடங்கும்.
- உப்பு மற்றும் எலுமிச்சை பிழியப்பட்ட மோரை பருகி வர வேண்டும்.
- இஞ்சி, தேன், சாத்துக்குடி ஜூஸ் மற்றும் புதினா கலந்த தண்ணீர் குடித்து வருவது நல்லது.
- அரை டீஸ்பூன் சீரகம் கலந்த ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வரவும்.
- வெங்காய சாறு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வேப்பிலை சாற்றுடன் தேன் மற்றும் அரை கப் மோர் கலந்த வேப்பிலை கஷாயம்.
- துளசி ஊற வைக்கப்பட்ட தண்ணீர். ஊற வைத்த 30 நிமிடங்கள் கழித்து குடிப்பது சிறந்தது.
- நன்கு உலர வைத்த அத்திப்பழத்தை, ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ளவும்.