உடல் எடையிழப்பிற்கு இந்த கஞ்சி ஒன்றே போதுமானது

Report Print Kavitha in ஆரோக்கியம்
311Shares
311Shares
lankasrimarket.com

சௌசௌ என்பது நமக்கு தெரிந்த ஒரு காயாகும். இதனை பெங்களூர் கத்திரிக்காய் என்றும் கூறுவர்.

இதன் அறிவியல் பெயர் சிகியம் ஏட்யுள் ஆகும்.

இதில் கலோரிகள், சோடியம் ,பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, க்ளுகோஸ், புரதம், கால்சியம், இரும்பு, மக்னீசியம், வைட்டமின், ஏ , பி 6 , சி, டி ஆகியவை அடங்கியுள்ளது.

பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்ட சௌசௌ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.

குறிப்பாக உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் நபர், சௌசௌ கூழ் எடுத்துக் கொள்வதால் அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

சௌசௌ காயை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்
 • எடை குறைப்பிற்கு சௌசௌ சேர்த்துக் கொள்வதுடன் பயிற்சிகளும் மேற்கொள்வதால் எளிதில் பலன் கிடைக்கும்.
 • சௌசௌ உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.
 • செரிமான மண்டலம் சீராக இயங்க இந்த காய் மிகவும் அவசியம்.
 • உடல் நலத்திற்கு பெரும் நன்மைகளைச் செய்யும் இந்த சௌசௌ. இதில் இருக்கும் வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.
 • இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.
 • மலச்சிக்கல் தடுக்க உதவி புரிகின்றது.
 • பெருங்குடல் புற்றுநோயை இந்த காய் பெரிதும் தடுக்கிறது.
 • உணவுக் கட்டுபாட்டில் விரைந்து பயன் பெற நினைக்கிறவர்கள் தினமும் வேக வைத்த சௌசௌ எடுத்துக் கொள்வது நல்லது.
 • வேகவைத்த சௌசௌ எடுத்துக் கொள்வது ஒரு ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.
 • இது ஹைபர் டென்ஷனை குறைக்கிறது.
 • உணவுக் கட்டுபாட்டில் இருக்கும் நேரத்தில், தினமும் காலை உணவிற்கு முன் இந்த காயை எடுத்துக் கொள்ளலாம்.
 • சௌசௌவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இதனை அரிசிக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த காயை எப்படி பயன்படுத்துவது?

சௌசௌ சமைப்பதற்கு முன், இதன் தோலை நீக்கி விட வேண்டும்.

பிறகு சௌசௌ கழுவி சுத்தம் செய்து பின் பயன்படுத்த வேண்டும்.

சௌசௌவை இரண்டு பாதியாக நறுக்கி, ஒன்றோடு மற்றொன்றை தேய்ப்பதால் அதன் விதை விலகி விடும்.

அதன் விதையை முழுவதும் நீக்கிய பிறகு மறுமுறை கழுவிவிட்டு பின் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

பின் அதை வேகவைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சீரகம், மிளகு தாளித்து கஞ்சி போல் செய்து குடிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்