வெங்காயத்தின் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள்

Report Print Raju Raju in ஆரோக்கியம்
374Shares
374Shares
lankasrimarket.com

சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் என இரண்டிலும் பல்வேறு மருத்துவ குணநலன்கள் நிறைந்துள்ளன.

புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் வெங்காயத்தில் அதிகளவில் உள்ளதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்துகிறது.

  • நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்.
  • வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஆசனக் கடுப்பு நீங்கும்.
  • வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்குவதோடு, இதை மோரில் போட்டு குடிக்க இருமல் குறையும்.
  • வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
  • வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துவதோடு, ஜீரணத்துக்கும் உதவுகிறது.
  • வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாவதோடு, ரத்த அழுத்தமும் குறையும்.
  • சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாக பயன்படுத்தலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்