உடல் எடையை குறைக்க எந்த வகை வாழைப்பழம் உதவும் தெரியுமா?

Report Print Kabilan in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று சிலரும், குறையும் என்று சிலரும் கூறும் நிலையில், எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்ட வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

எல்லா வகை வாழைப்பழங்களும் ஒரே மாதிரி பண்பை பெற்றவை அல்ல. சில வகை வாழைப்பழங்கள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

சில வகை வாழைப்பழங்கள் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும், ஒரு வாழைப்பழத்தில் 108 கலோரி உள்ளது. இது 18 கிராம் கார்போஹைட்ரேட்டிற்கு சமமானது. மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் விட்டமின், தாதுப் பொருட்கள் உள்ளன.

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்

செவ்வாழை, பூவம் பழம், கற்பூரவள்ளி, மொந்தம் பழம் ஆகிய வாழைப்பழங்கள் உடல் எடையை குறைக்க உதவும். இவற்றில் உள்ள அதிகளவு B6 மற்றும் நார்சத்து இருப்பதனால் இவைகள் உடலில் கொழுப்புகளை குறைக்கும்.

உடல் எடையை அதிகரிக்க செய்யும் பழங்கள்

மலை வாழைப்பழம், நேந்திரம் பழம் ஆகியவற்றில் அதிக அளவு, அதாவது 10 சதவிதம் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. எனவே, உடல் எடையை அதிகரிப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த பழங்களில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ், கிளைகோஜனாக மாற்றப்பட்டு தசைகளில் சேமிக்கும் போது, தசைகளுக்கு வலிமை கிடைக்கும்.

இதனால் உடல் எடை கூடும். மேலும் இவற்றை மில்க் ஷேக் அல்லது சேலட்டாக சாப்பிட்டாலும் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

வாழைப்பழ ஸ்மூதி

வாழைப்பழத்தில் ஸ்மூதி செய்தி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும். அத்துடன், மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டாலும் உடலில் சக்தி அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்