ஒரு டம்ளர் இந்த ஜூஸ் குடிங்க! சிறுநீரகத்தை பாதுகாக்கலாம்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்
396Shares
396Shares
lankasrimarket.com

துரித உணவுகளால் ஈர்க்கப்பட்டு அதிகம் உட்கொள்வதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு நாமே காரணமாகி விடுகிறோம்.

உடல் உள்ளுறுப்புகளான சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்றவற்றை ஆரோக்கியமாக பாதுகாத்தாலே பல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இதற்கு இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் ஜூஸ் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • கேரட் - 1
  • ஆரஞ்சு - 1
  • வாழைப்பழம் - 1
  • பால் - 120 மி.லி
செய்முறை

வாழைப்பழம், ஆரஞ்சு பழத்தின் தோலை நீக்கி துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள், கேரட்டையும் நறுக்கிக் கொள்ளவும்.

மிக்சிஸியில் கொஞ்சம், கொஞ்சமாக நறுக்கிய துண்டுகளை போட்டு அரைத்தவுடன் கடைசியாக பாலை கலந்து குடித்தால் ஜூஸ் தயார்.

நன்மைகள்
  • கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • எலும்புகள் வலுவடையும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும்.
  • செரிமானத்தை ஊக்குவிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்