ஒரு பிறவி போராளியின் வாழ்க்கை வரலாறு! இறுதி நிமிடங்கள் வரை கற்றுத்தந்த பாடம்

Report Print Nivetha in வரலாறு
193Shares
193Shares
Nallur-Travels-August-Promotion

வறுமையான குடும்பத்தில் பிறந்து உலகின் நாயகனாக உருவெடுத்த திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அளப்பரியது.

கருணாநிதி ஒரு பிறவி போராளி என்பதால் அவரின் பிறப்பும் பல நாள் போராட்டத்தில் இன்று நிறைவுக்கு வந்தது. வயது முதிர்ச்சி காரணமாக தற்போது அவர் மரணம் அடைந்து இருக்கிறார்.

சிறுவயதில் போராட தொடங்கிய அவர் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்துள்ளார். சினிமா, நாடகம், அரசியல் என்று எல்லா துறையிலும் நாயகனாக மிளிர்ந்தார். அவர் வாழ்க்கை வரலாறு எல்லோரும் கற்று கொள்ள வேண்டிய பொக்கிஷம்.

திருக்குவளை என்ற திருவாரூர் அருகே இருக்கும் கிராமத்தில், முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக கடந்த 1924 ஆண்டு ஜூன் 3ஆம் கருணாநிதி பிறந்தார்.

தட்ஷிணாமூர்த்தி என்பது இவரது இயற்பெயர். பின்னர் முத்துவேல் கருணாநிதி என்று பெயர் மாற்றி கடைசியில் கருணாநிதி என்று நிலைகொண்டது.

அந்த சிறிய கிராமத்தில் தொடங்கிய அவரது வாழ்க்கை, உலகம் முழுக்க வியக்க வைக்கவும் வகையில் பெரிய அரசியல் வரலாறாக மாறியது.

கருணாநிதி மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். இதனால் பிழைப்பிற்காக அவரின் சிறிய வயதில் கோவில் நடன கலைஞராக பணியாற்றி இருந்துள்ளார்.

அவருக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் மீது பெரிய அளவில் ஆர்வம் இருந்துள்ளது. படிப்பில் தமிழில் மட்டும் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.

கருணாநிதி சரியாக 13 வயது நிரம்பி இருந்த போது, சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார். நீதிக் கட்சியை சேர்ந்த பட்டுக்கோட்டை அழகிரி பேச்சை கேட்டு மயங்கிய அவர், அரசியல் நிகழ்வுகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

இவர் தன்னுடைய பள்ளி வாழ்க்கையிலேயே போராடி இருக்கிறார். 6ஆம் வகுப்பு சேருவதற்காக இவர் அரசு பள்ளிக்கு சென்ற போது, இவருக்கு கல்வி மறுக்கப்பட்டு இருக்கிறது.

அப்போது இருந்த தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்காரை எதிர்த்து இவர் போராடி, அதே பள்ளியில் சேர்ந்து இருக்கிறார்.

அதன்பின் மிகப்பெரிய அளவில் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போர் நடந்த போது அதில் முன்னின்றார்.

தமிழகம் உள்ளிட்ட இந்தி இல்லாதா மாநிலங்களில் இந்தியை திணிக்க முற்பட்ட போது, அதற்கு எதிராக தமிழகம் கிளர்ந்து எழுந்தது. இதனால் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் முழுக்க நடந்தது.

இப்போதைய தமிழக அரசியல் தலைவர்களை பலரை அளித்தது, இந்த போராட்டம் தான். கருணாநிதியை அளித்ததும் இதே போராட்டம் தான்.

தன்னை எப்போதும் ஒரு பத்திரிக்கையாளனாக அடையாளம் காட்டிக் கொள்ளவதில் இவருக்கு பெரிய சந்தோசம் இருந்துள்ளது. 1941ஆம் ஆண்டு "மாணவநேசன்" என்ற மாத இதழைக் கையெழுத்து இதழாக மாணவர்களுக்காக தொடங்கி நடத்தினார்.

அதன்பின் தொடர்ச்சியாக நிறைய பத்திரிக்கைகளை நடத்தி இருக்கிறார். அண்ணா நடத்திய "திராவிட நாடு" இதழில் என்று நிறைய கட்டுரைகளும் எழுதி இருக்கிறார்.

இதன்முலம் வந்த அனுபவம் மற்றும் ஆர்வத்தால் "முரசொலி வெளியீட்டுக் கழகம்" என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கினார் . பின்னர் அது "முரசொலியை" மாத இதழாக மாறியது.

10.08.1942இல் தொடங்கிய அந்த இதழ் இப்போது வரை தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது. திமுகவின் மிக முக்கிய இதழாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு நாடகங்களால் கொடி கட்டி பறந்த போது, இவர் நாடகங்களில் வசனம் எழுத தொடங்கினார். இதன் மூலமே இவர் தமிழகம் முழுக்க பிரபலம் அடைந்தார். அப்போது இருந்து பல முக்கிய அரசியல் தலைவர்களின் நட்பும், அறிமுகமும் அவருக்கு இந்த நாடகம் மூலமே கிடைத்தது.

அதேபோல் இந்த நாடகம் மூலமே அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. 28.5.1944 இவர் முதலில் ''பழனியப்பன்'' என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.

தமிழ் சோறு போடுமா என்ற கேள்விக்கு இவர் தான் சிறந்த பதில். தமிழை வைத்தே இலட்சக்கணக்கில் சினிமாவில் சம்பாதித்தார்.

தமிழ் சினிமாவில் கதை வசனம் எழுதியே பல லட்சங்களில் சம்பாதித்தார். பராசக்தி தொடங்கி பல படங்களில் தீ தெறிக்கும் வசனம் எழுதி மக்களிடம் சென்று சேர்ந்தார்.

11.11.44 அன்று பத்மாவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த மண வாழ்க்கை மிகவும் நன்றாக சென்றது. அவர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.1948ஆம் ஆண்டு அவரது மனைவி பத்மாவதி மரணம் அடைந்தார் .

அண்ணா, பெரியார் இருவரும் தான் கருணாநிதியின் அரசியல் குரு. இருவர் ஊட்டிய அரசியல் கருத்துக்கள் தான் கருணாநிதியை வளர்த்தது.

இருவரின் மேடை பேச்சை கேட்ட இவர் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.அதேபோல் இருவரின் அரசியல் கருத்துக்கள் மூலம் தனக்கான அரசியல் பாதையை அமைத்துக் கொண்டார்.

90 களின் மத்தியில் திராவிடர் கழகம் சரியான உருவம் பெற்றது. 19.4.1946 திராவிடர் கழக கொடி உருவானது. இதற்காக கருப்பு நிற கொடியில் தன்னுடைய இரத்தத்தை வைத்தார். அதன்மூலம் கருப்பு சிவப்பு கொடி உருவானது. அந்த கொடிய பின் திராவிட முன்னேற்ற கொடியாக மாறியது.

1948ஆம் ஆண்டு தயாளு அம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்திற்கு முன் சில நிமிடம் முன் நடந்த இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின் 1966ஆம் ஆண்டு ராசாத்தி அம்மாவை திருமணம் செய்து கொண்டார்.

திகவிடம் இருந்து பிரிந்து திமுக உருவானது. 17.9.1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. இதில் கட்சியை உருவாக்க உழைத்தவர்களின் கருணாநிதியும் ஒருவர். அதன்பின் ஒரு தேர்தல் சென்று அதற்கு அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிட்டது.

முதல்முறையாக 1957ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார் கருணாநிதி.1967ல் அண்ணா முதல்வர் ஆன பின், தமிழக பொதுபணிதுறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும் தேர்வானார்.

அறிஞர் அண்ணா மறைந்த பின் முதல்வர் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டார், அதோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பையும் ஏற்றார்.

முதல்முறையாக தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 வருடம் தேர்வானார். முதல்முறை தமிழக முதலமைச்சராக 1969 தேர்வானார். இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சராக 1971 தேர்வானார். மூன்றாம் முறையாகத் தமிழக முதலமைச்சராக 1989 தேர்வானார்.

நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சராக 1996 தேர்வானார். ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சராக 2006தேர்வானார்.

தமிழ்நாடு சட்டப்சபைக்கு பல தொகுதிகளில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். முதல்முறையாக குளித்தலை தொகுதியில் வென்றார்.

தஞ்சாவூர்,சைதாப்பேட்டை, அண்ணாநகர், அண்ணாநகர், அண்ணாநகர், திருவாரூர், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் வென்றுள்ளார்.

கடந்த 1957 - லிருந்து 2006 வரை போட்டியிட்ட சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற ஒரே நபர் இவர் மட்டும்.

கருணாநிதியின் சாதனைகள்

இலவச மின்சாரம், கலைஞர் காப்பிட்டு திட்டம், இலவச அரிசி, இடஒதுக்கீடு, பொலிஸ் கமிஷன் இலவசப் பஸ் பாஸ், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சமத்துவபுரம், நமக்கு நாமே திட்டம், மாநில சுயாட்சித் தீர்மானம்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் தனித்துறை, இலவசமாக சைக்கிள் ரிக்க்ஷா, இலவச டிவி,உழவர் சந்தைகள், மறுவாழ்வு இல்லங்கள், ஆகியவற்றை கொண்டு வந்தார்.

மொழிப்போர் தியாகிகளுக்கும் ஓய்வூதியம் ,மே முதல் விடுமுறை. இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புத் தேர்வு, மேயருக்கு நேரடித் தேர்தல், சமூக சீர்திருத்தத்திற்காக தனி அமைச்சகம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு,மாணவ, மாணவியர்களுக்கு இலவச தொழிற் கல்வி, மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியது ஆகிய நடவடிக்கைகளை செய்துள்ளார்.

உள்ளாட்சியில் 33 விழுக்காடு மகளிருக்கு இடஒதுக்கீடு, மினிபஸ் திட்டம்,டைடல் பூங்கா, மாநில திட்டக்குழு, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம் ,சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், டெஸ்மா சட்டம் ரத்து, பொறியில் கல்விக் கட்டணம் குறைப்பு, மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெற்றது, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உத்தரவு,தமிழ் கட்டாயப் பாடம், கண்ணகி சிலை திறப்பு ஆகியவற்றை செய்தார்.

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம், பனைத் தொழிலாளர் வாரியம், மருத்துவம், கார் உற்பத்தி தொழிற்கூடங்கள் தொடங்க அனுமதி, தமிழைச் செம்மொழி, கடல் சார் பல்கலைக் கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றை கொண்டு வந்தார். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு, ஆகியவற்றை செய்தார் .

பல சாதனைகளையும் சேவைகளையும் மக்களுக்காக செய்துவிட்டு இன்று மௌனமாக உறங்கிக் கொண்டிருக்கின்றார்.

திராவிட இயக்கப் பெருந்தலைவர்களில் தவிர்க்க முடியாத தனிப் பெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி. பெரியார், அண்ணா வழியில் பீடு நடை போட்டு வந்த கருணாநிதியின் வாழ்க்கைப் பாதையில் ரோஜாப் பூக்களை விட முட் புதர்களே அதிகம்.. அதையும் தாண்டி சாதனை படைத்த பெருந்தகையாளர் கருணாநிதி. அவரது வாழ்க்கை வரலாற்றின் மிக முக்கிய துளிகளில் சில உங்களது பார்வைக்கு.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்