ஏலியன்களால் கட்டப்பட்ட குடைவரைக் கோவில்: எல்லோராவின் மர்மங்கள்

Report Print Meenakshi in வரலாறு
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

உலகிலேயே முதலில் அமைக்கப்பட்ட எல்லோராவின் குடைவரைக் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

பல்லாயிரக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவில் உண்மையில் ஒரு அதிசயம் தான். நாம் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வகையில் அந்த கோவிலை கட்டியுள்ளனர்.

advertisement

இங்கு 100 அடி உயரதூண் ஒன்று உள்ளது, வழக்கத்திற்கு மாறாக இந்த தூணானது மேலிருந்து கீழாக செதுக்கப்பட்டதாகும்.

உண்மையில் இந்த கோவிலை கட்டுவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும், ஆனால் 18 வருடத்திலேயே எப்படி இந்த கோவிலை கட்டி முடித்தனர் என்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

குறித்த தூணை செதுக்குவதற்காக அதிகமான கற்களை அகற்றியுள்ளனர், சுமார் 4000 டன் எடையுள்ள கற்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

அவ்வளவு எடைக்கு கற்களை எப்படி அகற்றினர், வெளியில் எப்படி கொண்டு வந்தனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

தற்போதுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கூட அவ்வளவு எடையுள்ள கற்களை அகற்றுவது சிரமம். ஆனால் பல நூற்றாண்டுக்கு முன்னர் இந்த கோவிலை கட்டியது அதிசயம்.

மனிதர்களால் இப்படி ஒரு கோவிலை கட்டுவது கடினம். கண்டிப்பாக ஏலியன்கள் தான் இந்த கோவிலை கட்டி இருக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

புகழ்மிக்க இந்த கோவிலை முகலாய மன்னர் ஔரங்கசீப் அழிக்க முயன்றதாகவும், ஆனால் சில சேதங்களை ஏற்படுத்த முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதேபோன்று பிரமிடுகளையும் அழிக்க முயற்சித்த போது சிறு சேதங்களை மட்டுமே ஏற்படுத்த முடிந்ததாகவும், இதையும் ஏலியன்களே கட்டியதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments