கொல்கொதா! இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறப்படும் இடம்

Report Print Gokulan Gokulan in வரலாறு
0Shares
0Shares
lankasri.com
advertisement

இயேசுவை சிலுவையில் அறையுண்ட இடமாகிய கொல்கொதா கிறித்தவர்களுக்குப் புனித இடமாக கருதப்படுகின்றது.

கொல்கொதா என்பது பழங்கால எருசலேம் நகரின் மதில்சுவர்களுக்கு வெளியே இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும்.

advertisement

தற்போது இது கல்வாரி அல்லது கபாலஸ்தலம் என்றும் ஏற்பாட்டில் அழைக்கப்படுகிறது

கி.பி. 325ஆம் ஆண்டில் எழுந்தது அந்த ஆண்டில் த ஹெலேனா என்பவர் இயேசு சிலுவையில் இறந்த இடத்தை அடையாளம் கண்டார்.

ஹெலேனா உரோமைப் பேரரசன் முதலாம் காண்ஸ்டண்டைன் என்பவரின் தாய் ஆவார். இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்திலிருந்து சில மீட்டர் தொலையில் இயேசுவின் கல்லறையையும் ஹெலேனா அடையாளம் கண்டார். அதோடு இயேசு அறையுண்டு இறந்த சிலுவையும் கண்டெடுக்கப்பட்டது.

ஹெலெனாவின் மகன் மன்னர் முதலாம் காண்ஸ்டண்டைன் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் அழகிய கோவிலைக் கட்டியெழுப்பினார்.

கி.பி. 117-138 ஆண்டுகளில் உரோமைப் பேரரசனாக இருந்த ஹேட்ரியன் எருசலேமில் கிறித்தவ புனித இடங்களை அழித்துவிட்டு, உரோமை தெய்வங்களின் கோவில்களை அங்கு எழுப்பினார்.

கி.பி. 325 இல் நிசேயா பொதுச்சங்கத்தின்போது எருசலேம் ஆயர் மக்காரியுசு என்பவர் காண்ஸ்டண்டைன் மன்னனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

எருசலேமில் இயேசுவின் கல்லறைமேல் ஹேட்ரியன் மன்னன் கட்டியிருந்த பிற சமயக் கோவிலை அழித்துவிட்டு, அந்த இடத்தை மீண்டும் கிறித்தவ வணக்கத்திற்கு விடவேண்டும் என்பதே அக்கோரிக்கை ஆகும்.

காண்ஸ்டண்டைன் பிற சமயக் கோவிலை அழித்த பின்னர் அவ்விடத்தில் மிகப் பெரிய அளவில், எழில் மிக்க ஒரு பேராலயத்தைக் கட்டி எழுப்பினார்.

அப்பேராலயத்தில் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஒரு குவிமாடம் எழுப்பப்பட்டது. இயேசு இறந்த இடமாகிய கொல்கதாவும் பேராலயத்தின் உள் வருமாறு கட்டடம் வடிவமைக்கப்பட்டது.

இயேசுவின் கல்லறைப் பகுதியில் வழிபாட்டு உரிமை கத்தோலிக்கர்கள், கிரேக்க மரபுவழிச் சபையினர் மற்றும் அர்மீனிய சபையினருக்கு உண்டு. இந்த மூன்று சபையினரும் இணைந்து புதுப்பித்தல் பணிகளைச் செய்தனர்.

advertisement

இன்று இயேசு அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேர்மேலாக எழுகின்ற குவிமாடத்தின் திறப்பிலிருந்து கதிரவனின் ஒளி பரந்து சிதறி அக்கல்லறையை ஒளிமயமாக்குகிறது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்