1000 ஆண்டுகள் பழமையான சிவன் ஆலயத்தின் பூமியிலிருந்து வெளிவந்த 15 ஐம்பொன் சிலைகள்

Report Print Shalini in வரலாறு
41Shares
41Shares
lankasrimarket.com

இந்தியாவில், பட்டுக்கோட்டை நகரின் கிழக்கே 7 கி.மீ தொலைவில் உள்ள பழஞ்சூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது.

இந்த ஆலயத்தில் கிணறு அமைக்கும் பணிக்காக குறித்த ஆலயத்தின் பூமியை தோண்டியுள்ளார்கள்.

இதன்போது புதைக்கப்பட்ட நிலையில் இருந்த 15 ஐம்பொன் சிலைகள் வெளிவந்துள்ளன.

சோழர்களால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகளைக் கடந்த 'பழமலைநாதர்" சிவாலயத்திலேயே குறித்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சிலைகள் அனைத்தும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழர்களின் கலைநயம் பொருந்திய ஐம்பொன் சிற்பங்களை அள்ளிச் செல்வதில் அந்நிய மன்னர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினார்கள்.

அவர்களிடம் இருந்து குறித்த சிலைகளை பாதுகாப்பதற்காகவே, மக்கள் இச்சிலைகளை பூமிக்குள் புதைத்து வைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்