சாப்பிடுவதற்கான அதிர்ஷ்ட திசை: பின்பற்றினால் செல்வம் அதிகரிக்குமாம்

Report Print Printha in வீடு - தோட்டம்
1052Shares
1052Shares
lankasrimarket.com

நாம் சாப்பிடும் போது எந்த திசையில் அமர்ந்து உட்கொண்டால் அதிர்ஷ்டத்தை பெறலாம் என்று சாஸ்திரங்கள் கூறுவதை பார்க்கலாம்.

உணவு சாப்பிடுவதை குறித்து சாஸ்திரங்கள் கூறுவது என்ன?

சாஸ்திரங்களின் படி, ஒருவர் இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிட வேண்டும். அதிலும் பாதி வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காலியாக இருக்க வேண்டும். இவ்வாறு சாப்பிடுவது தான் ஆரோக்கியமான உணவு முறை என்று பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு வேளை உணவு சாப்பிடுபவர்கள் யோகிகள் என்றும், இருவேளைகள் உணவு சாப்பிடுபவர்கள் போகி (அனுபவிக்கப் பிறந்தவன்) என்றும், மூன்று வேளைகள் உணவு சாப்பிடுபவர்கள் ரோகி (நோயாளி) எனவும் சாஸ்திரங்கள் கூறுகிறது.

எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் அதிர்ஷ்டம்?
  • கிழக்கு திசை இந்திரனுக்கு உரியது. எனவே கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்வி, ஆயுள் அதிகரிக்கும்.
  • மேற்கு திசை செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்கு உரியது. எனவே மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் வீட்டில் செல்வம் பெருகும்.
  • வடக்கு திசை சிவனுக்கு உரியது. எனவே வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு நோய்வாய்ப்படும் நிலை உண்டாகும்.
  • தெற்கு திசை எமனுக்கு உரியது. எனவே தெற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு அழியாத புகழ் உண்டாகும்.
குறிப்பு

ஒருவர் தங்களின் வீட்டை தவிர்த்து உறவினர்களின் வீட்டிற்குச் சென்றால் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக் கூடாது, ஏனெனில் அவர்களின் உறவு பகையாகிவிடும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்