வீட்டில் மீன் தொட்டியை வைக்காதீர்கள்: ஆபத்து உள்ளது

Report Print Printha in வீடு - தோட்டம்
892Shares
892Shares
lankasrimarket.com

வாஸ்து என்பதற்கு ஒத்து போதல் என்று பொருள், அதன்படி நம் வீட்டிற்கு ஒத்துப்போகக் கூடிய வகையில் ஒருசில வாஸ்து சாஸ்திரங்கள் இருக்கிறது.

வீட்டில் மீன் தொட்டி வைக்க கூடாது ஏன்?

மீன்களை தொட்டியில் வைத்து வீட்டில் வளர்க்கக் கூடாது, ஏனெனில் அதனால் மன அமைதி குறைந்து, கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.

மீன் தொட்டி வைப்பது என்பது பழமையான ஒரு முறையாகும், வீட்டில் மீன் தொட்டி வைக்கலாம் என்று எவ்வித வாஸ்து சாஸ்திர நூல்களிலும் குறிப்பிடவில்லை.

ஏனெனில் வாஸ்து ஆராய்ச்சியின் படி, மீன் தொட்டி எந்தவிதமான நல்ல பலனையும் தருவதில்லை, ஆனால் அதற்கு மாறாக வீட்டில் உள்ள யாருக்காவது உடல்நிலை பாதிப்பு தான் ஏற்படுகிறது.

எனவே வீட்டில் மீன் தொட்டி வைப்பது நல்லதல்ல, அதனால் மீன் தொட்டியை அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் வளர்க்கலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.

வீட்டிற்கான இதர வாஸ்து குறிப்புகள்
  • வீட்டின் எதிரே கசாப்புக்கடை, இடிந்த கோவில்கள், குத்துக்கல், பட்டறைகள் மற்றும் மருத்துவமனைகள் இருக்கக் கூடாது.
  • வீட்டின் கீழ்புறம் ஓடை அல்லது நீர்நிலை ஓடுவது போன்ற அமைப்புகள் இருக்கலாம் என்று வாஸ்து கூறுகிறது.
  • வீட்டில் ஓடாத கடிகாரங்கள், வரவேற்பு அறையில் பாரதப்போரின் படங்கள் ஆகியவை இருக்கக் கூடாது. ஏனெனில் அது வாஸ்து குற்றங்களை கொடுக்கும்.
  • வீட்டில் குபேரபொம்மைகள், தவளை, தலைக்கு மேல் வேல் உள்ள முருகன் படம், ஒரு அடிக்கு மேல் சிலைகள் ஆகியவை வைக்கக் கூடாது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்