திமுக-வுக்கு என்னை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை: மு.க.அழகிரி ஆதங்கம்

Report Print Jubilee Jubilee in இந்தியா
திமுக-வுக்கு என்னை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை: மு.க.அழகிரி ஆதங்கம்
0Shares
0Shares
lankasrimarket.com

சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது என்று முன்னாள் அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. அழகிரி கூறியுள்ளார்.

கடந்த 2011ம்ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்திய அமைச்சராக இருந்த அழகிரி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். ஆனால் தற்போது அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் எந்த வித பிரசாரத்துக்கும் செல்லவில்லை.

இந்நிலையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், திமுகவுக்கு என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை என ஆதங்கப்பட்டுள்ளார்.

மேலும், நடைபெறவிருக்கும் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை என்று கூறிய அவர் மதுரை தொகுதியில் ஒன்றில் கூட திமுக வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments