சினிமா நடிகர்களுக்கு ஆசி வழங்கிய 116 வயது துறவி தவநிலையில் மரணம்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு ஆசி வழங்கிய 116 வயது துறவி நெமிலி அருகே தவநிலையில் மரணமடைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள பாலூர் என்ற கிராமத்தில் 5.12.1900-ல் பிறந்தவர் எத்திராஜ்.

இவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருந்ததால், மூலிகை வைத்தியத்தை எளிதில் கற்று தேர்ந்தார்.

உடலில் உண்டாகும் பல நோய்களுக்கு இயற்கை மூலிகைகளை வைத்து குணப்படுத்தக் கூடிய வல்லமை படைத்தவராக திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில், இவர் தன் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேலூர் நெமிலி அருகே தக்கோலம் அரசு மருத்துவமனை பின்புறம் தனக்கென ஒரு குடிசை அமைத்து ஆன்மீகத் தொண்டாற்றி கொண்டே மூலிகை வைத்தியமும் பார்த்து வந்தார்.

இதனால், தமிழகத்தில் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்கள் பகுதியிலிருந்து ஏராளமானோர் இவரிடம் வந்து தங்களது பிரச்சனைக்கு தீர்வு கண்டு சென்றுள்ளனர்.

மேலும், வடிவேலு, டி.ராஜேந்தர் என பல சினிமா பிரபலங்களும் இவரிடம் ஆசி பெறுவதற்கு அடிக்கடி தக்கோலம் வந்து செல்வதுண்டு.

இதை தொடர்ந்து, அந்த பகுதியில் அகதீஸ்வரர் என்ற கோயிலை இவர் கட்டி வந்துள்ளார். அதன் கட்டுமான பணிகள் முடிவு பெறும் நிலையில் அடுத்த வாரம் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

116 வயதான எத்திராஜ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு சரியாக 07.20 மணிக்கு தவத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென இறந்தார் என தெரிய வந்துள்ளது.

அவருடைய இறப்பு ஆன்மீகவாதிகள் மட்டுமின்றி அவருக்கு அறிமுகமாயிருந்த பல பிரபலங்கள் இடையேயும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகவாதி எத்திராஜின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

அவரது உடல் தவநிலையிலேயே தகனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments