கின்னஸ் புத்தகத்தில் மோடி உடை: ராகுல் கிண்டல்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரதமர் நரேந்திர மோடியின் உடை ரூ.4.31 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "மோடியின் மகத்தான தியாகத்துக்கு கிடைத்த சிறிய வெகுமதி' என்று விமர்சித்துள்ளார்.

அந்தப் பதிவுடன் சேர்த்து, பிரதமர் நரேந்திர மோடியின் உடை ரூ.4.31 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி ரூ.10 லட்சம் மதிப்புடைய மிக விலை உயர்ந்த உடையை அணிந்திருந்தார். அந்த உடையில், நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்று தங்க சரிகை எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த உடை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது அந்த உடையின் அடிப்படை விலை ரூ.11 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மோடியின் உடையை ரூ.4.31 கோடிக்கு குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜி படேல் என்பவர் ஏலத்தில் எடுத்தார்.

இதன்மூலம், மிகவும் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட உடை என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இது இடம்பெற்றது.

அந்த உடையை ஏலத்தில் விட்டதன்மூலம் கிடைத்த தொகை மத்திய அரசின் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு அளிக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments