8 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபருக்கு பொலிசார் வலை

Report Print Aravinth in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

திருமணத்தின் பெயரில் 8 பேரை ஏமாற்றிய வாலிபரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த சலாமியா பானு, (28) என்பவர் பொலிஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, மதுரையைச் சேர்ந்த காதர் பாட்சா என்பவர் கடந்த மே மாதம், என்னை திருமணம் செய்த நிலையில் என்னிடமிருந்த மூன்று லட்சம் ரூபாய், எட்டு சவரன் நகை, ஏ.டி.எம்., கார்டுகளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்.

மேலும், எடுத்துச் சென்ற ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 35 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார்.

இதற்கிடையில், ஏற்கனவே என் கணவருக்கு, சென்னையை சேர்ந்த நிர்மலாவுடன் திருமணமாகி, மூன்று குழந்தைகள், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜமுனா ராணியை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதுமட்டுமல்லாது, வத்தலகுண்டு மகாலட்சுமி என, எட்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, சிங்கப்பூரில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி, மூன்று லட்சம் ரூபாயை காதர் பாட்சா மோசடி செய்துள்ளான் என திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் அளித்துள்ள புகாரை அடுத்து, பொலிசார் அவனை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments