ஜோதிடர் குறித்த 12, 18 திகதிகள்: எதனை தெரிவு செய்வார் சசிகலா?

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

மறைந்த முன்னாள் முதல்வர் சசிகலாவுக்கு ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை இருப்பதன் காரணமான ஆஸ்தான ஜோதிடர் ஒருவரை எப்போதும் தனக்காக வைத்திருந்தார்.

ஆனால் தற்போது அவர் இறந்துவிட்டதால் போயஸ்கார்டன் வந்துசெல்லும் அந்த ஜோதிடரை நீக்கிவிட்டார் சசிகலா.

advertisement

இதற்கிடையில், சசிகலாவுக்காக மூன்று ஜோதிடர் குழுவை அவரது உறவினர்கள் நியமித்துள்ளனர்.

அதில் ஒருவர், சென்னையைச் சேர்ந்தவர், மற்ற இருவரும், மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள்.

இம் மூவரிடமும் தனித்தனியாக ஜோதிடம் கேட்கப்படும். இந்த மூன்று ஜோதிடர்களின் கணிப்புகளில் ஒன்றாக இருக்கும் விஷயத்தை மட்டும், சசிகலா ஏற்றுக் கொள்கிறார்.

அதிமுக பொதுக்குழு கூடிய திகதி, பொதுச்செயலாளராக பதவி ஏற்ற நாள் ஆகியவற்றை இந்த ஜோதிடர் குழு தான் கணித்து கொடுத்துள்ளது.

மேலும், முதல்வராக பதவி ஏற்பதற்கு உகந்த நாளாக, ஜனவரி 12 மற்றும் 18 ஆகிய திகதிகளை இந்த ஜோதிடர்கள் கணித்து கொடுத்துள்ளனர்.

இந்த இரண்டு திகதிகளில் எந்த திகதியை தெரிவுசெய்துகொண்டு அரியணையில் ஏறப்போகிறார் என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே மோடி அரசின் முடிவுகளுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்து வருவதுடன், முதல்வர் ஓபிஎஸ்-டம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments