புகார் கூறிய இராணுவ வீரரை காணவில்லை! கதறும் மனைவி

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

எல்லைப் பாதுகாப்புப் படையின் 29வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த தேஜ் பகதூர் எனும் வீரர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அதில், எல்லையில் 11 மணிநேரத்திற்கும் மேலாக நின்று கொண்டு வேலை செய்யும் இராணுவ வீரர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதில்லை என்றும், பெரும்பாலும் வெறும் வயிறுடனே தூங்கச் செல்வதாகவும் புகார் தெரிவித்தார்.

advertisement

இந்த வீடியோ வைரலாக பரவவே, பலமுறை ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள தேஜ் பகதூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், குடிகாரர் என்றும் எல்லை பாதுகாப்புப் படை விளக்கம் அளித்தது.

இதனை மறுத்துள்ள தேஜ் பகதூரின் மனைவி, மனநலம் பாதிக்கப்பட்ட நபரை எல்லைக்கு அனுப்பி வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நேற்று பிற்பகல் முதல் தன்னுடைய கணவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பதாகவும், தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments